3 மாவட்ட போலீசாருக்கு கைசுத்திகரிப்பான் - டி.ஐ.ஜி. லோகநாதன் வழங்கினார்

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 3 மாவட்ட போலீசாருக்கு கைசுத்திகரிப்பானை டி.ஐ.ஜி. லோகநாதன் வழங்கினார்.

Update: 2020-04-08 09:24 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு கை சுத்திகரிப்பான்களை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் நேற்று வழங்கினர். தஞ்சை டி.ஐ.ஜி. அலுவலக வளாகத்தில் இந்த கை சுத்திகரிப்பான் வழங்கும் பணியை டி.ஐ.ஜி. லோகநாதன் தொடங்கி வைத்தார்.

பின்னர் டி.ஐ.ஜி. லோக நாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 1990 முதல் 94-ம் ஆண்டுகளில் பி.எஸ்ஸி. வேளாண்மை பட்டப்படிப்பு படித்தேன். என்னுடன் படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு ஏதாவது உதவி செய்ய முடிவு செய்தனர். இதன் அடிப்படையில் இந்த கை சுத்திகரிப்பானை வழங்குகின்றனர்.

மொத்தம் 500 லிட்டரை தலா 200 மி.லி. வீதம் 2,500 பாட்டில்களில் நிரப்பப்பட்டுள்ளது. இவை தஞ்சாவூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றும் போலீசாருக்கு வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆகியோர் இருந்தனர்.

மேலும் செய்திகள்