‘‘கோ கொரோனா'' கோஷம் உலக பிரபலம் ஆகிவிட்டது - ராம்தாஸ் அத்வாலே சொல்கிறார்

‘‘கோ கொரோனா'' கோஷம் உலக பிரபலம் ஆகிவிட்டது என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறினார்.

Update: 2020-04-06 22:49 GMT
மும்பை,

மத்திய மந்திரி ராம்ராஸ் அத்வாலே கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி மும்பையில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டாா். இந்த பிரார்த்தனை கூட்டத்தில் சீன நாட்டு தூதரக அதிகாரிகளும், புத்த மத துறவிகளும் கலந்து கொண்டனர். பிரார்த்தனையின் போது ராம்தாஸ் அத்வாலே கலந்து கொண்டவர்களுடன் சேர்ந்து ‘‘கோ கொரோனா'' என கோஷம் எழுப்பினார்.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. அப்போது ‘‘கோ கொரோனா'' என கோஷம் எழுப்பினால் கொரோனா போய்விடுமா என சிலர் விமர்சனம் செய்து இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பிரதமர் மோடி கேட்டு கொண்டதன் பேரில் பொதுமக்கள் மின்விளக்கை அணைத்து விட்டு வீட்டு வாசலில் அகல் விளக்கு ஏற்றினர். அப்போது பலரும் ‘‘கோ கொரோனா'' என கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து ராம்தாஸ் அத்வாலே கூறியதாவது:-

இந்த கோஷத்தை பிப்ரவரி மாதமே கூறினேன். அப்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லாமல் இருந்தது. எனவே அந்த நேரத்தில் ‘‘கோ கொரோனா'' என கூறினால் கொரோனா போய்விடுமா என சிலர் கேட்டனர். தற்போது அந்த வாசகத்தை உலகம் முழுவதும் கேட்கமுடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்