கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் - மணிகண்டன் எம்.எல்.ஏ. வழங்கினார்
கீழக்கரையில் பல்வேறு இடங்களுக்கு சென்று மணிகண்டன் எம்.எல்.ஏ. கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
கீழக்கரை,
கீழக்கரையில் கொரோனா விழிப்புணர்வு தடுப்பு நடவடிக்கைகள் நடைபெறும் பஸ் நிலையம், அரசு மருத்துவமனை, இந்து பஜார் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று மணிகண்டன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். காய்கறி மார்க்கெட்டில் வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோருக்கு சமூக இடைவெளி குறித்து அறிவுரை வழங்கினார். மேலும் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவும்படி கூறியதுடன், முக கவசங்களை இலவசமாக வழங்கி கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கீழக்கரை தாசில்தார் வீரராஜா, நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி, சுகாதார ஆய்வாளர் பூபதி, பொறியாளர் மீரா அலி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கீழக்கரை நகர் செயலாளர் ஜகுபர் உசேன், துணை நகர் செயலாளர் குமரன், பொருளாளர் நாராயணன், மீனவர் அணி செயலாளர் நண்டு முனியசாமி, எம்.ஜி.ஆர் மன்ற நகர் செயலாளர் சேகர், பெண்கள் இளம் பாசறை செயலாளர் செல்வ கணேசன் பிரபு, சிறுபான்மை பிரிவு நகர் செயலாளர் யாசின் நூரீதீன் உள்பட கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.