4 ஆயிரம் பேருக்கு முக கவசம்; சந்திரபிரபா எம்.எல்.ஏ. வழங்கினார்
4 ஆயிரம் முககவசங்களை சந்திரபிரபா எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் வழங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பகுதிகளில் சந்திரபிரபா எம்.எல்.ஏ. ஆய்வு பணிகளை மேற்கொண்டு நடமாடும் காய்கறி சந்தையை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினார். பின்னர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், நகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு 4 ஆயிரம் முககவசங்களை தனது சொந்த செலவில் வழங்கினார்.
மேலும் அம்மா உணவகத்தில் அ.தி.மு.க. சார்பில் இலவச உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டார். உணவை சாப்பிட்டு பார்த்ததோடு தரமான உணவு வழங்க வலியுறுத்தினார்.