பேரையூர் பேரூராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

பேரையூர் பேரூராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2020-03-30 21:45 GMT
பேரையூர்,

பேரையூர் பேரூராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. செயல் அலுவலர் வைரக்கண்ணு தலைமையில் 40 பேரூராட்சி தூய்மை ஊழியர்கள், அலுவலக ஊழியர்கள், மஸ்தூர் பணியாளர்கள் தெரு, தெருவாக சென்று கிருமி நாசினி மருந்து மற்றும் பிளச்சிங் பவுடர் தூவினர். 

மேலும் டிராக்டர், தீயணைப்புத்துறை வாகனம் மூலமும் கிருமி நாசினி மருந்து தெளித்தனர். தொடர்ந்து கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி மூலம் தினசரி கொரோனாவை தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துக் கூறி வருகின்றனர். பொதுமக்கள் வீடுகளில் இருந்து தேவை இல்லாமல் வெளியில் வரக்கூடாது என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்