செம்பூர் போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை

செம்பூர் போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-03-30 22:30 GMT
மும்பை,

செம்பூர் போலீஸ் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சம்பத் தத்தாரே காவ்டே (வயது58). இவர் நேற்று காலை 11.30 மணியளவில் போலீஸ் நிலைய பொருட்கள் வைத்திருக்கும் அறைக்கு சென்றார். வெகுநேரமாக வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த சக போலீஸ்காரா் ஒருவர் உள்ளே சென்றார். அப்போது சம்பத் தத்தாரே தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். உடனடியாக அவர் ராஜாவாடி ஆஸ்பத்திாிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு போலீஸ் அதிகாரியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

அதிகாரியின் சட்டை பையில் இருந்து போலீசார் கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், புற்றுநோய் பாதிப்பால் இந்த விபரீத முடிவை எடுப்பதாக அவர் கூறியிருந்தார். புற்று நோயால் போலீஸ் அதிகாரி போலீஸ் நிலையத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் போலீசார் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை செய்து கொண்ட உதவி சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் தத்தாரே வருகிற மே மாதத்துடன் பணி ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்