கீழக்கரை பஸ் நிலையம் காய்கறி மார்க்கெட்டாக மாறியது

கீழக்கரை பஸ் நிலையத்திற்கு காய்கறி மார்க்கெட் மாற்றப்பட்டுள்ளது.

Update: 2020-03-29 22:45 GMT
கீழக்கரை, 

கீழக்கரையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து பஜாரில் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட் கூட்ட நெரிசல் காரணமாக தற்போது புதிய பஸ்நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கே ஒரு மீட்டர் இடைவெளிக்கு கோடுகள் போடப்பட்டு, பொதுமக்கள் இடைவெளி விட்டு நின்று பொருட்கள் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

எனவே பொதுமக்கள் புதிய பஸ்நிலையத்திற்கு சென்று காய்கறிகளை வாங்குமாறு கீழக்கரை நகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை கீழக்கரை தாசில்தார் வீரராஜா, ஆணையாளர் தனலட்சுமி ஆகியோர் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் பூபதி, பொறியாளர் மீரா அலி, இளநிலை உதவியாளர் கார்த்தி கேஸ்வரன், துப்புரவு மேற்பார்வையாளர் சக்தி உள்பட தூய்மை பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்