மன்னார்குடியில், அனுமதி சீட்டு பெற லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் குவிந்தனர்
மன்னார்குடியில் அனுமதி சீட்டு பெற லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மன்னார்குடி,
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய- மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டில் முடங்கி உள்ளனர்.
அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள் வெளியே வந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலையில் ஏராளமானோர் கூடுவதை தவிர்க்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். தடையை மீறி வெளியே சுற்றித்திரிபவர்களை போலீசார் அடித்து விரட்டி வருகிறார்கள். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மேலப்பாலம் அருகே மன்னார்குடி தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் லாரிகள் நிறுத்தும் இடம் உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் தங்கள் லாரிகளை நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் இங்கிருந்து லாரிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நெல் மூட்டைகளை எடுத்து நீடாமங்கலம் ரெயில்வே நிலையத்துக்கு கொண்டு சென்று நெல்மூட்டைகள் சரக்கு ரெயிலில் ஏற்றப்படுகிறது.
இதற்காக நேற்று லாரிகளுக்கு சுழற்சி முறையில் சுமை ஏற்ற அனுமதி சீட்டு வழங்கப்பட்டது. இந்த அனுமதி சீட்டை பெற லாரி உரிமையாளர்களும், ஓட்டுனர்களும் நூற்றுக்கணக்கில் லாரி நிறுத்தும் இடத்தில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா பரவலை தடுக்க மருந்து, மளிகை கடை உள்பட பல இடங்களில் மக்கள் இடைவெளி விட்டு நின்று பொருட்களை வாங்கி செல்லும் நிலையில் அனுமதி சீட்டு பெற லாரி டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்றது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இது குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, தாசில்தார் கார்த்திக், துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கூட்டத்தினரை கலைந்து போக செய்தனர். மேலும் லாரிகளுக்கு டோக்கன் வழங்குவதை அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்க மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியகோட்டி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.