விராலிமலை, வடகாடு பகுதிகளில் தடை உத்தரவை மீறி சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு நூதன தண்டனை

விராலிமலை, வடகாடு பகுதிகளில் தடை உத்தரவை மீறி சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு நூதன தண்டனை வழங்கி, கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர்.

Update: 2020-03-27 22:15 GMT
விராலிமலை,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து எல்லைப் பகுதிகளும் அடைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல் விராலிமலை பகுதிகளில் இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிகாமணி மற்றும் விராலிமலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காமராஜர் நகர் பகுதியில் சில இளைஞர்கள் சுற்றித்திரிந்தனர். இதையடுத்து அவர்களை துணை போலீஸ் சூப்பிரண்டு பிடித்து தோப்புக்கரணம் போடச்சொல்லி அவர் களுக்கு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வை குறித்து விரிவாக எடுத்து கூறினார். பின்னர் அவர்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரத் சீனிவாஸ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சாலைகளில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் பிடித்து எங்கு செல்கிறீர்கள் என்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை அமர வைத்து கொரோனா விழிப்புணர்வு படங்களை காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி நூதன முறையில் தண்டனையை வழங்கினார். பின்னர் அவர்களிடம் மீண்டும் சாலைகளில் உத்தரவை மீறி சுற்றுத்திரிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார்.

மேலும் செய்திகள்