சாலை தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் சாவு
சாலை தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரம்பூர்,
எண்ணூரை சேர்ந்தவர் புவனேஸ்வரன் (வயது 26). இவருடைய நண்பர் தினேஷ் (25). இவர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் எண்ணூரில் இருந்து குடிபோதையில் சாப்பாட்டுக்காக ஓட்டலை தேடி வந்தனர். மோட்டார் சைக்கிளை புவனேஸ்வரன் ஓட்டினார். அவருக்கு பின்னால் தினேஷ் அமர்ந்து இருந்தார்.
பாரிமுனையில் சென்னை ஐகோர்ட்டு எதிரே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த புவனேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தினேஷ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுபற்றி யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினவேல் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.