காஞ்சீபுரம் மாவட்டத்தில் 752 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - அதிகாரி தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 752 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் வி.கே.பழனி கூறினார்.

Update: 2020-03-27 22:30 GMT
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் வி.கே.பழனி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஓமன் நாட்டில் இருந்து வந்த காஞ்சீபுரம் என்ஜினீயருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்த அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அவர் தற்போது காஞ்சீபுரம் அருகே தண்டலத்தில் உள்ள அவரது மாமியார் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார். 

வருகிற 4-ந்தேதி வரை மருத்துவ குழுவினரால் அவர் கண்காணிக்கப்படுவார். காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று உள்ளதா? என சந்தேகப்படும் வகையில் உள்ள காஞ்சீபுரம், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்பட மாவட்டத்தில் இதுவரை 752 பேர் கண்டறியப்பட்டு, அவரவரின் வீடுகளிலே தனிமைப்படுத்தி அவர்களை மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது. 

தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்பதற்காக அவர்களின் வீடுகளில் பச்சை அடையாள நோட்டீசை சுகாதாரத்துறையினர் ஒட்டி உள்ளனர். மாவட்ட சுகாதாரத்துறையின் மூலம் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் முகக்கவசம், கிருமிநாசினி மருந்து வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்