தூத்துக்குடி-கோவில்பட்டியில் தடை உத்தரவை மீறிய 15 பேர் கைது
தூத்துக்குடி, கோவில்பட் டியில் 144 தடை உத்தரவை மீறியதாக 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி,
கொரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றுதலை தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கின் 3-வது நாளான நேற்று தூத்துக்குடியில் அத்தியாவசிய பொருட்களான மருந்து கடைகள், காய்கறி கடைகள், பால் டிப்போ, பெட்ரோல் பங்குகள், அம்மா உணவகங்கள், ரேஷன் கடை உள்ளிட்டவைகளை தவிர மற்ற அனைத்து கடை களும் அடைக்கப்பட்டு இருந்தன.
ஒரு சிலர் அவ்வப்போது சைக்கிள், மோட்டார்சைக்கிள் களில் பயணித்தனர். அவர் களை ரோந்து பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். மேலும் முக கவசங்கள் அணிய வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர். மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
கோவில்பட்டி மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அரி கண்ணன், பெஸ்கின் மனோகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப் போது ஊரடங்கு உத் தரவை மீறி, கோவில்பட்டி லட்சுமி மில் ரெயில்வே கேட் அருகில் கேனில் டீ விற்ற கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த காளிராஜை (வயது 57) போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று அத்தியாவசிய தேவைக்கு மாறாக கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிளில் சென்ற விளாத்திகுளத்தைச் சேர்ந்த ஜெயபெருமாளை (45) போலீசார் கைது செய்தனர்.
திருச்செந்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கள் அந்தோணி துரைசிங்கம், சோனியா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவில் திருச்செந்தூர் அருகே பிச்சிவிளையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஊரடங்கு உத்தரவை மீறியும், தொற்றுநோய் பரவும் வகையிலும் டீக்கடைகளை திறந்து வைத்ததாக ஜெபசீலன் (வயது 48), பிரகாஷ் (38) ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.