நாளை நடைபெற இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் கடைசி பரீட்சை ஒத்திவைப்பு
நாளை நடைபெற இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் கடைசி பரீட்சை ஒத்திவைக்கப்பட்டது.
மும்பை,
மராட்டியத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் நாளை நடைபெற இருந்த கடைசி பரீட்சை ஒத்தி வைக்கப்படுவதாக மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்து உள்ளார்.
கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்கும் வகையில் மராட்டியத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் மாணவர்கள் தேர்வின்றி அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். ஆனால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்ந்து நடைபெறும் என நேற்று முன்தினம் மாநில பள்ளி கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்து இருந்தார். அதன்படி நேற்று 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வரலாறு பாடத்தேர்வு நடந்தது. அப்போது தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு கையை சுத்தம் செய்யும் கிருமி நாசினிகள், முக கவசங்கள் வழங்கப்பட்டன.
இந்தநிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு எஞ்சியுள்ள புவியியல் பாடத்தோ்வு ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில பள்ளி கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் நிலையை கருத்தில் கொண்டு, பள்ளி கல்வித்துறை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) நடைபெற இருந்த கடைசி பரீட்சை ஒத்தி வைக்கப்படுகிறது. இந்த தேர்வு நடைபெறும் நாள் 31-ந் தேதிக்கு பிறகு முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மராட்டியத்தில் ஏற்கனவே 9 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.