சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை: தனிமைப்படுத்திக் கொள்வேன் என உறுதி அளித்ததால் 166 பேர் அனுப்பி வைப்பு
சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்த பயணிகளுக்கு மதுரை விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தன்னை தனிமைப்படுத்திக் கொள்வேன் என உறுதிமொழி கடிதத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்ததால் 166 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மதுரை,
துபாயில் இருந்து நேற்று முன்தினம் மாலையில் ஒரு விமானம் மதுரைக்கு வந்தது. அந்த விமானத்தில் 6 குழந்தைகள் உள்பட 155 பயணிகள் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் மதுரை கலெக்டர் வினய் உத்தரவின்பேரில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியாராஜ் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அதில் அந்த பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவர்களது கையில் ஏப்ரல் 17-ந்தேதி வரை வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளேன் என்ற வாசகம் அடங்கிய முத்திரை சீல் குத்தப்பட்டது. அதுபோல், பயணிகள் அனைவரிடமிருந்தும் உறுதி மொழி கடிதத்தில் கையெழுத்து பெறப்பட்டது. அந்த உறுதிமொழி கடிதத்தில், “கொரோனா அறிகுறிகள் இல்லாத போதும் என்னை நான் வீட்டில் 28 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்வேன். தன் சுத்தத்தை பேணி காப்பேன் என்றும், ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள மருத்துவரை அணுகுவேன், சமுதாய நலன் கருதி இதை நான் கண்டிப்பாக கடைபிடிப்பேன்” என எழுதப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து அந்த விமானத்தில் வந்த அனைவரும் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், 50 வயதுக்கு மேற்பட்ட 5 பேரை மட்டும் முகாம்களில் தங்க வைக்க பரிந்துரை செய்யப்பட்டது. வயது முதிர்வின் காரணமாகவும், சர்க்கரைநோய், ரத்த அழுத்த நோய் போன்றவை கேட்டறிந்து அதன்படி அவர்களை கண்காணிக்க வேண்டிய அவசியம் இருப்பதால் முகாமில் தங்க வைத்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களின் உடல் ஆரோக்கியத்தை பொறுத்து ஒரு சில தினங்களில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் கூறினர்.
சிங்கப்பூர் விமானம்
இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் 3 குழந்தைகள் உள்பட 166 பயணிகள் இருந்தனர். அவர்களில் யாரேனும் இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்கா, சீனா மற்றும் சில குறிப்பிட்ட நாடுகளில் இருந்து சிங்கப்பூர் வழியாக வந்திருக்கிறார்களா? என்பது குறித்து முதலில் சோதனை செய்யப்பட்டது. ஆனால், அந்த சோதனையில் அந்த நாடுகளுக்கு சென்றுவிட்டு யாரும் வரவில்லை என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா? என்பது குறித்த பரிசோதனை நடைபெற்றது. இதனை சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியாராஜ் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த பரிசோதனையில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இருந்ததாக தெரியவில்லை. அதன்பின்னர் அவர்களுக்கு விமான நிலையத்தில் தன் சுத்தம், வீட்டிற்கு சென்ற பின்னர் தங்களை எவ்வாறு தனிமைப்படுத்தி பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பின்னர் அவர்கள் அனைவரிடமும் சுய உறுதிமொழி கடிதத்தில் கையெழுத்து பெறப்பட்டது.
விமானம் ரத்து
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மதுரை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக இலங்கை, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளி நாடுகளுக்கான விமான சேவை படிப்படியாக ரத்து செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்றுமுதல் வெளிநாடுகளுக்கு செல்லும் அனைத்து விமான சேவையும் வருகிற 28-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோல், உள்நாட்டு விமான சேவையில் குறிப்பிட்ட சில விமானங்கள் மட்டுமே சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.