கோவில்பட்டியில் மின்சாரம் தாக்கி பிளம்பர் பலி

கோவில்பட்டியில் மின்சாரம் தாக்கி பிளம்பர் உயிரிழந்தார்.

Update: 2020-03-21 22:00 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் மின்சாரம் தாக்கி பிளம்பர் உயிரிழந்தார்.

பிளம்பர் 

கோவில்பட்டி புதுகிராமம் செண்பகா நகரைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன் (வயது 44). பிளம்பர். இவருடைய மனைவி கற்பகவள்ளி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

நேற்று காலையில் தங்கபாண்டியன், புதுகிராமம் செண்பகா நகரில் உள்ள வள்ளியம்மாளின் வீட்டில் பிளம்பிங் வேலை செய்வதற்காக சென்றார். அவர், அங்கு குழாய்களை பொருத்தி விட்டு, மோட்டாரை இயக்குவதற்காக சுவிட்சை இயக்கினார்.

போலீசார் விசாரணை 

அப்போது எதிர்பாராதவிதமாக தங்கபாண்டியன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்