தொலைபேசி எண்கள் அறிவிப்பு கொரோனா வைரஸ் குறித்து தகவல் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை மாவட்ட கலெக்டர் தகவல்

கொரோனா வைரஸ் குறித்து கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் தகவல்கள் மற்றும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-03-20 22:00 GMT
சென்னை, 

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக பொதுமக்களிடம் இருந்து வரப்பெறும் தகவல்கள் மற்றும் புகார்களை 24 மணி நேரமும் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக, சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் தகவல்கள் மற்றும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

1077 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ, 044-25243454 என்ற எண்ணிலோ, 9384056232 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கோ பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்கள் குறித்து 044-29510400, 29510500, 9444340496, 8754448477 மற்றும் 104 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் ஆர்.சீத்தாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்