கொடைக்கானல் மலைப்பகுதியில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த சிரமப்படும் தீயணைப்பு படையினர்
கொடைக்கானல் மலைப்பகுதியில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் சிரமப்பட்டு வருகின்றனர்.
கொடைக்கானல்,
கொடைக்கானல் நகரில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் ஒரேயொரு வாகனம் மட்டுமே உள்ளது. கொடைக்கானல் தாலுகாவுக்கு உட்பட்ட எந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டாலும், அந்த வாகனம் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சாலைகளில் மரங்கள் விழுந்தால் அப்புறப்படுத்துவது, விபத்தில் சிக்கியவர்களை மீட்பது, பள்ளங்களில் விழுந்த கால்நடைகளை மீட்பது உள்ளிட்ட பணிகளுக்கு செல்லும் போதும் இந்த வாகனத்தையே பயன்படுத்துகின்றனர். தீயணைப்பு துறைக்கு வழங்கப்பட்டுள்ள வாகனம் பெரியதாக உள்ளது. இதனால் குறுகலான மலைப்பாதை மற்றும் கரடுமுரடான, மேட்டுப்பகுதியான இடங்களில் இந்த வாகனத்தை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் தீயணைப்பு வாகனத்தை மெயின்ரோட்டிலேயே நிறுத்தி விட்டு செல்ல வேண்டியுள்ளது.
கூடுதல் தீயணைப்பு படை வீரர்கள்
குறிப்பாக காட்டுத்தீ பற்றி எரியும்போது அதன் அருகே வாகனத்தை கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேடான பகுதிகளில் வாகனம் ஏறி இறங்கும்போது தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. சம்பவ இடத்துக்கு உரியநேரத்தில் செல்ல முடியாததால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது. தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் சுட்டெரிக்கும் வெயில் வாட்டுகிறது. இதனால் வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் பட்டா இடங்களில் அவ்வப்போது காட்டுத்தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. அதனை எதிர்கொண்டு துரிதமாக தீயை அணைக்கவும், மீட்பு பணியில் தாமதமின்றி ஈடுபடவும் தீயணைப்பு படையினருக்கு கூடுதல் வாகனம் வழங்க வேண்டும். அந்த வாகனம், மலைப்பாங்கான இடங்களில் செல்லும் வகையில் இருக்க வேண்டும். இதுமட்டுமின்றி கொடைக்கானல் தீயணைப்பு நிலையத்துக்கு கூடுதலாக தீயணைப்பு படை வீரர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.