ரூ.3 கோடி போதைப்பொருள் பறிமுதல் இலங்கை வாலிபர் உள்பட 2 பேர் கைது

சென்னையில் ஸ்கூட்டரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2020-03-19 22:45 GMT
சென்னை, 

சென்னை மண்ணடி மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஸ்கூட்டர் ஒன்றில் மாநில போதைப்பொருள் தடுப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அந்த ஸ்கூட்டரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.3 கோடி ஆகும்.

இதுதொடர்பாக இலங்கையைச் சேர்ந்த முகமது நிலாப் (வயது 30), சென்னை மண்ணடியை சேர்ந்த செல்வமணி (31) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், இந்த போதைப்பொருளை இலங்கைக்கு கடத்திச்செல்ல திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரும் போதைப்பொருளை கல்லூரி மாணவர்களுக்கு வினியோகிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்