நெல்லையில் காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை போராட்டம் சீரான குடிநீர் வழங்கக் கோரிக்கை
நெல்லையில், சீரான குடிநீர் வழங்கக் கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
நெல்லையில், சீரான குடிநீர் வழங்கக் கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகை போராட்டம்
நெல்லை தச்சநல்லூரில் உலகம்மன் கோவில் வடக்கு தெருவில் சுமார் 100–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த பகுதியில் கடந்த 2 மாதங்களாக குடிதண்ணீர் சரியாக வரவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அந்த பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். அப்படியிருந்தும் தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் தச்சநல்லூர் சிவன்கோவில் அருகே உள்ள மாநகராட்சி அலகு அலுவலகம் முன்பு நேற்று காலை காலிக்குடங்களுடன் பெண்கள் திரண்டு வந்தனர். அவர்கள் அங்கு அமர்ந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சீரான குடிநீர்
தகவல் அறிந்த தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கு மாநகராட்சி அதிகாரிகளும் வந்தனர். அவர்கள், சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு, விட்டு கலைந்து சென்றனர்.