சிதம்பரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை சப்-கலெக்டர் தலைமையில் ஆலோசனை
சிதம்பரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சப்-கலெக்டர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
சிதம்பரம்,
சிதம்பரம் பகுதியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு சப்-கலெக்டர் விசுமகாஜன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, பொதுமக்கள் அவசியம் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தேவையில்லாத கூட்டங்களுக்கு செல்ல வேண்டாம். சிதம்பரத்தில் தங்கும் விடுதிகளில் வெளிநாட்டினர் தங்கியிருந்தால், அவர்களது பெயர் பட்டியலை சப்-கலெக்டர் அலுவலகம், வருவாய்த்துறை, துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கொடுக்க வேண்டும். தியேட்டர்கள், வணிகவளாகங்கள் மார்ச் 31-ந்தேதி வரை மூட வேண்டும். கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் பொதுமக்களின் கைகளை கழுவி ஒரு வழியில் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும். கிருமி நாசினி தெளித்து வீடுகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் நோய் பரவாமல் இருக்க பொதுமக்கள் கை கழுவ தண்ணீர் தொட்டிகள் வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தனி வார்டுகள்
இதையடுத்து ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சண்முகம் பேசுகையில், ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் உடனடியாக மருத்துவமனைக்கு வரவேண்டும் என்றார். கூட்டத்தில் சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால்பாபு, நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா, அண்ணாமலை பல்கலைக்கழக நுண் உயிரியியல் துறை பேராசிரியர் குணசேகரன், சிதம்பரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தமிழரசன், நகராட்சி பொறியாளர் மகாதேவன், சுகாதார ஆய்வாளர் பால்டேவிட்ஸ், சிவக்கம் சுகாதார மேற்பார்வையாளர் அரிகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் கருணாநிதி, வர்த்தகர் சங்க தலைவர் சதீஷ்குமார், சப்-கலெக்டர் நேர்முக உதவியாளர் ராமதாஸ், ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் கே.ஆர்.ஜி. தமிழ்வாணன், சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் தனியார் திருமண மண்டபம் உரிமையாளர்கள், தங்கும் விடுதி மேலாளர்கள், வங்கி மேலாளர்கள், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் நிர்வாகிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கோவில் செயல் அலுவலர்கள், ஆரம்ப சுகாதா நிலைய மேற்பார்வையாளர்கள், ஆய்வாளர்கள், நகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.