பொள்ளாச்சியில் பரபரப்பு ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து திருட முயன்ற வாலிபர் கைது ரூ.10 லட்சம் தப்பியது

பொள்ளாச்சியில் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதனால் ரூ.10 லட்சம் தப்பியது.

Update: 2020-03-14 23:45 GMT
பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ராஜா மில் ரோட்டில் ஒரு தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி முன் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை அங்கு வந்த ஒருவாலிபர், அங்குள்ள ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து திருடும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது இந்த காட்சிகள் அங்குள்ள கேமரா மூலம், அந்த வங்கிக்கு சொந்த மான மும்பையில் உள்ள தலைமை வங்கி அதிகாரி களுக்கு தெரியவந்தது.

உடனே அவர்கள், பொள் ளாச்சி மேற்கு போலீஸ் நிலை யத்துக்கு தகவல் கொடுத்தனர். மேலும் ஏ.டி.எம். எந்திரத்தை ஒருவர் உடைப்பது போன்ற புகைப் படத்தை போலீசாரின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பரமேஸ் வரன், சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

விசாரணை

இதையடுத்து போலீசார் உஷார்படுத்தபட்டு தீவிர வாகன சோதனை நடத்தப் பட்டது. இதற்கிடையில் தெற்கு ஒன்றிய அலுவலகம் முன் ஒரு கார் நிறுத்தப்பட்டு இருந்தது. காரில் ஒருவர் தூங்கி கொண்டிருந்தார். காரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க பயன்படுத்த கூடிய உபகரணங்களும் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம், விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் தேனி மாவட்டம் பழனிசெட்டி பட்டியை சேர்ந்த ஹரிபிரசாத் (வயது 28) என்பது தெரிய வந்தது. ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறியதால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று துருவி, துருவி விசாரித்தனர். மேலும் மும்பை யில் இருந்து வங்கி அதிகாரி அனுப்பிய புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அதில் இருப்பது ஹரிபிரசாத் என்பது உறுதி செய்யப்பட்டது.

ரூ.10 லட்சம் தப்பியது

இது குறித்து மேற்கு போலீஸ் நிலையத்தில் வங்கி அதிகாரி கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரம், சப்-இன்ஸ்பெக்டர் சின்னகாமணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்த னர். மேலும் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான ஹரிபிரசாத் பி.டெக், எம்.பி.ஏ. படித்து உள்ளார். கடன் அதிகமாக இருப்பதால் அவர் ஏ.டி.எம். மையத்தில் பணத்தை திருட முயன்ற தாகவும், எந்திரத்தை உடைக்க முடியாததால் ரூ.10 லட்சம் தப்பியதாக போலீசார் தெரி வித்தனர். இதற்கிடையில் பறி முதல் செய்யப்பட்டது திருட்டு காரா என்பது குறித் தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொள் ளாச்சியில் ஏ.டி.எம் எந்திர த்தை உடைத்து பணத்தை திருட முயன்ற சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்