மாவட்டத்தில் ‘கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை’ கலெக்டர் எஸ்.சிவராசு தகவல்

திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை என்று கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்தார்.

Update: 2020-03-14 23:30 GMT
திருச்சி,

திருச்சி மாநகராட்சி தேவர் ஹாலில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக அனைத்து தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள், அனைத்து கல்லூரி முதல்வர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், உணவகம் மற்றும் விடுதி உரிமையாளர்கள், அரசு போக்குவரத்துக்கழகம் ஆகியவற்றுக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை தாங்கி கலெக்டர் எஸ்.சிவராசு பேசியதாவது:-

கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை

அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டப உரிமையாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், தனியார் மற்றும் அரசு போக்குவரத்துக்கழகங்கள், அடுக்கு மாடி குடியிருப்போர் நல சங்கம், பெரும் வணிக நிறுவனங்கள், அரசு மருத்து வமனை மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஆகிய நிறுவ னங்களின் உரிமையாளர் களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச் சரிக்கை விழிப்புணர்வு நடவடிக் கைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் இருந்த நிலையில் ஜப்பான் நாட்டில் கடந்த 20 ஆண்டு களாக கைகளை முழுமையாக கழுவுவதன் மூலம் இந்த வைரஸ் பரவாமல் தடுக்கப் பட்டுள்ளது. முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக கைகளை சோப்பு போட்டு கழுவும் பழக்கத்தை நாம் கடைபிடிக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை. இருந்தாலும், இதில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக தினமும் நாம் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். இதன் மூலம் 80 சதவீதம் வைரஸ் பரவாமல் தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில்் மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) டாக்டர் சுப்ரமணி,் மாநகர் நல அலுவலர் டாக்டர் ஜெகநாதன் மற்றும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை யாசிரி யர்கள், கல்லூரி முதல்வர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமை யாளர்கள், பெரு வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் ஆகிய நிறு வனங்களை சேர்ந்த 850-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்