ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் மருத்துவ கல்வி துணை இயக்குனர் ஆய்வு
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா வார்டில் மருத்துவ கல்வி துணை இயக்குனர் சந்திரமோகன் ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்,
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. மக்களை கொன்று குவித்து வரும் இந்த வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதோடு இந்தியாவில் கொரோனா வைரசுக்கு கர்நாடக மாநிலத்தில் ஒருவர் உயிரிழந்து இருப்பது பீதியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் ஏராளமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கேரளாவில் கொரோனா பரவி வருவதால் அண்டை மாவட்டமான குமரி மாவட்டத்தில் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் சுகாதாரத்துறை மூலமாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
கிருமிநாசினி தெளிப்பு
குறிப்பாக கேரளாவை ஓட்டியுள்ள களியக்காவிளை மற்றும் சூழால் ஆகிய சோதனை சாவடிகள் வழியாக வரும் அரசு பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் வெளி நாடுகளில் இருந்து வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதுபோக கேரளாவுக்கு சென்று வரும் குமரி மாவட்ட தொழிலாளர்களையும் பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சிறப்பு வார்டு
இதையும் மீறி கொரோனா வைரசால் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டும், கொரோனா பரிசோதனை வார்டும் அமைக்கப்பட்டு உள்ளது.
அதோடு கொரோனா வைரஸ் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உதவி மையமும் அமைக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஆய்வு
இந்த நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா வார்டு சரியான பாதுகாப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்வதற்காக மருத்துவ கல்வி துணை இயக்குனர் சந்திரமோகன் நேற்று வந்தார். முதலில் கொரோனா சிறப்பு வார்டுக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் பரிசோதனை வார்டை ஆய்வு செய்தார். அப்போது கொரோனா வார்டு சிறப்பாக அமைக்கப்பட்டு இருப்பதாக கூறி டாக்டர்களை அவர் பாராட்டினார்.
எனினும் யாரேனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச் சை அளிக்க வார்டில் தனி அறை அமைக்கும்படி டாக்டர் களிடம் கூறினார். ஏன் எனில் ஒரே வார்டில் அடுத்தடுத்த படுக்கையில் நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்கும்போது கொரோனா மேலும் மேலும் பரவும் என்பதால் தனித்தனி அறைகள் அமைக்குமாறு கூறியுள்ளார். பின்னர் டாக்டர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
ஆய்வின்போது கல்லூரி டீன் டாக்டர் சுகந்தி ராஜகுமாரி, டாக்டர் அருள்பிரகாஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.