பணகுடி அருகே நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
பணகுடி அருகே நீர்நிலைகளில் இருந்த தனியார் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றினர்.
பணகுடி,
பணகுடி அருகே நீர்நிலைகளில் இருந்த தனியார் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றினர்.
ஓடை ஆக்கிரமிப்பு
நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான நீர்நிலைகளில் ஏராளமான தனியார் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறையினரும், நீர்வள ஆதாரத்துறையினரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது தொடர்பாக கோர்ட்டு உத்தரவின் பேரில் ஆங்காங்கே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.
வீடுகள் அகற்றம்
இந்த வகையில் பணகுடி அருகிலுள்ள லெப்பை குடியிருப்பு ஓடையில் ஆக்கிரமிப்பு செய்து சில தனியார் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களை கட்டியிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். உடனடியாக அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டதன் பேரில், ராதாபுரம் தாசில்தார் செல்வன் தலைமையில் நேற்று பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் அந்த பகுதிக்கு சென்றனர்.
அங்கு ஓடையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்ப. பின்னர் ஓடையும் சீரமைக்கப்பட்டது.
இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.