கொடைக்கானல் பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழை: மலைக்கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு
கொடைக்கானல் பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழை எதிரொலியாக, மலைக்கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
கொடைக்கானல்,
கொடைக்கானல் மேல்மலை பகுதியான பூம்பாறை, பூண்டி, மன்னவனூர், கிளாவரை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. அதன்படி நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி மன்னவனூர் ஆட்டுப்பண்ணை பகுதியில் 51.5 மில்லிமீட்டர் மழை பதிவானது.
கொடைக்கானல் பகுதியில் பெய்த கனமழை எதிரொலியாக, மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் வழியில் உள்ள மின்கம்பத்தில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன. இதனால் நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் பல்வேறு கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மலைக்கிராமங்கள் இருளில் மூழ்கியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
இதனையடுத்து நேற்று காலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மேத்யூ தலைமையிலான ஊழியர்கள் மலைக்கிராமங்களுக்கு சென்று மின்சார சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். 20 மணி நேரத்துக்கு பிறகு நேற்று மாலை 3 மணிக்கே மலைக்கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது. இதேபோல் கனமழை காரணமாக மன்னவனூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் வயல்வெளிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டு விவசாய பயிர்கள் சேதம் அடைந்தன. இது தொடர்பாக வேளாண்மைத்துறையினர் நேரடியாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கிடையே வறட்சியின் பிடியில் இருந்த பயிர்களுக்கு தற்போது பெய்த மழை புத்துயிர் ஊட்டுவதாக இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.