பலரிடம் கடன் வாங்கி மகன் ஏமாற்றியதால் அவமானம் : விஷம் குடித்து தம்பதி தற்கொலை

பலரிடம் கடன் வாங்கி மகன் ஏமாற்றியதால் அவமானம் அடைந்த தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2020-03-08 22:00 GMT
போத்தனூர்,

கோவை சுந்தராபுரம் அருகே லோகநாதபுரத்தை சேர்ந்தவர் விஜய சந்திரன் (வயது 57). லேப் டெக்னீசியன். இவருடைய மனைவி உமா மகேஸ்வரி (49). இவர்களுக்கு ஹரிகரகுமார் (27), அருண்குமார் (24) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இதில், ஹரிகரகுமார் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரி யாக பணியாற்றி வந்தார். அவர் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பினார். இதற்காக அவர், தன்னுடன் பணியாற்றிய பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் கடன் பெற்று ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 3-ந் தேதி ஹரிகரகுமார் திடீரென்று மாயமா னார். இதனால் தேடி கடன் கொடுத்தவர்கள் அவரை தேடி அடிக்கடி விஜய சந்திரனின் வீட்டுக்கு வந்தனர். மகன் அதிக அளவு கடன் வாங்கியதை அறிந்து பெற்றோர் கவலை அடைந்தனர்.

மேலும் கடன் கொடுத்த பலர் வீட்டுக்கு வந்ததால், அக்கம்பக்கத்தினர் மத்தியில் அவமானம் ஏற்படுவதாக விஜயசந்திரன் கருதினார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இது பற்றி அவர் தனது மனைவியிடம் கூறினார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து அவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் 2 பேரும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்