அரசின் திட்டங்களை பயன்படுத்தி பெண்கள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் கலெக்டர் பேச்சு
அரசின் திட்டங்களை பயன்படுத்தி பெண்கள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மகளிர் தினவிழாவில் மாவட்ட கலெக்டர் ராமன் பேசினார்.
சேலம்,
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் சேலம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் உலக மகளிர் தினவிழா சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில், பல்வேறு துறைகளை சேர்ந்த பெண் அதிகாரிகள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில், மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கி பேசியதாவது:-
வாழ்க்கை தரம்
பெண்கள் சுயமாக சம்பாதித்து தன் குடும்பத்தையும், தன் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் தேவையானவற்றை நிறைவேற்றி கொள்வதாக மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி அதன்மூலம் அரசின் வங்கி கடனுதவிகளை பெற்று வருவாயை அதிகரித்து கொள்ள வாய்ப்பை அரசு ஏற்படுத்தி கொடுத்து வருகிறது.
இதனை அனைத்து மகளிரும் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். பெண்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்பதை கருத்தில் கொண்டு பெண்களுக்கு எண்ணற்ற சலுகைகளும், அரசு நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே, அரசின் திட்டங்களை பெண்கள் முழுமையாக பயன்படுத்தி தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், திறமைகளை மென்மேலும் வளர்த்து கொண்டு தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
பரிசுத்தொகை
இதனை தொடர்ந்து சிறந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமரகுந்தி மற்றும் தேக்கம்பட்டி ஆகிய ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.2 லட்சம் பரிசுத் தொகைக்கான காசோலைகளையும், பாரதி மகளிர் சுய உதவிக்குழு, துர்கா மகளிர் சுய உதவிக்குழு, ரோஸ் மகளிர் சுய உதவிக்குழு மற்றும் கொழிஞ்சம்பட்டி மூன்று மகளிர் சுய உதவிக்குழு ஆகிய 4 சிறந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் பரிசுத் தொகைக்கான காசோலைகளையும் கலெக்டர் ராமன் வழங்கினார்.
மேலும், உலக மகளிர் தின விழாவில் சிறப்பாக கலை நிகழ்ச்சிகள் நடத்திய மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் செல்வக்குமார், சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் மாலதி, உதவி திட்ட அலுவலர்கள் (மகளிர் திட்டம்) ஷாகுல் ஹமீது, சுந்தரம், வெற்றிச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.