மகளிர் குழுக்களுக்கு ரூ.65 கோடி கடன் வழங்க இலக்கு கலெக்டர் தகவல்
மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.65 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் சிறுபான்மையின மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
சிறுபான்மையின மக்கள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கிடவும் மற்றும் தனிநபர் பொருளாதார முன்னேற்றம் அடையவும் அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. இத்திட்டங்களை முழுமையாக மக்களுக்கு வழங்கும் வகையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் வறுமையில் உள்ள சிறுபான்மையினத்தை சேர்ந்த கிறிஸ்தவா் மற்றும் முஸ்லிம்கள் வகுப்பை சேர்ந்த மக்களுக்கு தேவையான திட்டங்கள் வழங்கப்படுகின்றன.
மேலும், மாவட்ட மகளிர்் திட்டத்தின் மூலம் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான தொழிற் பயிற்சி மற்றும் கடனுதவி வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ரூ.48 கோடி கடனுதவி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.65 கோடி கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 5-ம் வகுப்பு முதல் என்ஜினீயரிங் பட்டப் படிப்பு வரை படித்த அனைவருக்கும் தேவையான தொழிற் பயிற்சி மற்றும் கடனுதவி 25 சதவீத மானியத்தில் வழங்கும் வகையில் மாவட்ட தொழில் மையம் செயல்பட்டு வருகிறது.
மாவட்ட மகளிர் திட்டம் மூலம் 24 வகையான பயிற்சிகள் வழங்கிட 8 மையங்கள் செயல்படுகின்றன. அவற்றில் கல்வி திறனுக்கேற்ப பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் 79 முஸ்லிம் பெண்களுக்கு ரூ.9.92 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் காமாட்சி, முஸ்லிம் மகளிர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ஜமால்ராஜா, முகமதுரபீக், கிறிஸ்தவ மகளிர் சங்க உறுப்பினர்கள் ஸ்ரீரில், தாமஸ், பாலக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.