போடி அருகே புதர்மண்டி கிடக்கும் மயானங்கள்

போடி அருகே கொட்டக்குடியில் மலைவாழ் பழங்குடியினர், ஆதிதிராவிடர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் என ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

Update: 2020-03-07 21:30 GMT
போடி, 

 கொட்டக்குடி கிராமத்தில் இவர்களுக்காக  3 இடங்களில் தனித்தனியாக மயானங்கள் உள்ளன. இதில் அந்தந்த சமுதாய மக்கள் சடலங்களை புதைத்து வருகின்றனர். இந்த மயானங்களுக்கு செல்வதற்கு தனித்தனியே பாதை வசதியும், காத்திருப்பு கூடமும் உள்ளது. இந்தநிலையில் அந்த மயானங்களுக்கு செல்லும் பாதைகளுக்கு அருகில் உள்ள நிலம் வைத்திருக்கும் சிலர், பாதையை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். 

இதனால் சடலங்களை, தனியார் தோட்டங்களின் வழியே அவற்றின் உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று மரம், செடிகளுக்கிடையே மிகுந்த சிரமத்துடன் கொண்டு செல்லும் நிலை உள்ளது. மேலும் கொட்டக்குடியில் உள்ள 3 மயானங்களும் புதர்மண்டி கிடக்கின்றன. 

எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கொட்டக்குடியில் உள்ள மயானங்களுக்கு செல்லும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் அந்த பாதையில் சடலங்களை எளிதாக கொண்டு செல்லும் வகையில் தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்