பாளையங்கோட்டை மத்திய சிறையில் போக்சோ சட்டத்தில் அடைக்கப்பட்ட முதியவர் திடீர் சாவு

பாளையங்கோட்டை மத்திய சிறையில் போக்சோ சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்த முதியவர் திடீரென்று இறந்தார்.

Update: 2020-03-07 21:45 GMT
நெல்லை, 

பாளையங்கோட்டை மத்திய சிறையில் போக்சோ சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்த முதியவர் திடீரென்று இறந்தார்.

முதியவர் கைது 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா எப்போதும் வென்றான் போலீஸ் நிலைய எல்லை பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 72). இவர் அங்கு ஓட்டல் நடத்தி வந்தார். இந்த நிலையில் 6–வது வகுப்பு படித்து வரும் 10 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஜெகநாதனை கைது செய்தனர். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்தது. அந்த தகவல் அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

திடீர் சாவு 

இந்த நிலையில் நேற்று அவரது உடல் நிலை திடீரென்று பாதிக்கப்பட்டது. இதைக்கண்ட சிறை போலீசார் உடனடியாக அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஜெகநாதன் சாவுக்கான காரணம் என்ன? என்று நெல்லை உதவி கலெக்டர் மணிஷ் நாரணவரே மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்