தெப்பத்திருவிழா

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா நடந்தது.

Update: 2020-03-07 00:30 GMT
வாலாஜாபாத், 

காஞ்சீபுரத்தில் உள்ள புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் தெப்பத்திருவிழா வாலாஜாபாத் தாலுகா தென்னேரி கிராமத்தில் உள்ள ஏரியில் நடைபெறுவது வழக்கம். அதன்படி வரதராஜ பெருமாள் காஞ்சீபுரத்தில் இருந்து வாலாஜாபாத் வழியாக கட்டவாக்கம், மஞ்சமேடு, குண்ணவாக்கம், கேவளவேடு உள்ளிட்ட கிராமங்கள் வழியாக தென்னேரி கிராமத்திற்கு வீதிஉலா சென்றார். தென்னேரி கிராமத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சன அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் மேளதாளங்கள் முழங்க தாத சமுத்திரம் எனும் தென்னேரி ஏரியில் மின்விளக்குகளால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி ஏரியில் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விழாவில் காஞ்சீபுரம், வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம் மற்றும் தென்னேரி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை பாபு நாயுடு தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்