சிதம்பரத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிதம்பரத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-03-06 22:00 GMT
சிதம்பரம், 

சிதம்பரத்தில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சிதம்பரம் வட்ட செயலாளர் வேல்வேந்தன் தலைமை தாங்கினார். தலைவர் குமார், செயலாளர் இளவரசன், நிர்வாகி ராமலிங்கம், கிளை செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டமானது, கடலூர் மாவட்டத்தில் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு என்று தனியாக மணல் குவாரி திறக்க வேண்டும், பொக்லைன் மூலம் லாரிகளில் மணல் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும், ஆன்-லைன் மூலம் மணல் பதிவில் ஊழல் நடந்து வருகிறது, இதில் தொடர்பு இல்லாத வசதி வாய்ப்பு படைத்தவர்கள் பண ஆதாயம் அடைவதால் பழைய முறையில் அதிகாரிகள் மூலம் அனுமதி சீட்டு வழங்கி மணல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் , மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவது, அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மாட்டுவண்டிகளை ஒப்படைப்பது என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாக குழு மணிவாசகம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் தமிமுன்அன்சாரி, மாவட்ட நிர்வாக குழுவினர் நாகராஜன், குப்புசாமி, வட்ட செயலாளர் அன்பழகன், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட தலைவர் துரை ,விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் காசிலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்