எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கவர்னர் பங்கேற்பு
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.
சென்னை,
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழா சென்னை கிண்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தின் வெள்ளி விழா அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தமிழக கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கினார்.
இதில் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கி.கஸ்தூரிரங்கன், பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் இரா.சிதம்பரம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், பதிவாளர் டாக்டர் எம்.பி.அஷ்வத் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பட்டமளிப்பு விழாவில் மருத்துவத்தில் 2 ஆயிரத்து 303 பேரும், பல் மருத்துவத்தில் 1,482 பேரும், இந்திய மருத்துவத்தில் 1,018 பேரும், மருத்துவம் சார்ந்த துணை படிப்புகளில் 12 ஆயிரத்து 787 பேரும் என என மொத்தம் 17 ஆயிரத்து 590 பேர் பட்டங்களை பெற்றனர்.
இதில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் இளநிலை பட்டப்படிப்பில் பதக்கங்கள், சான்றிதழ்கள் பெறுபவர்கள் என 724 பேருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேரடியாக பட்டங்கள், பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கினார். மீதமுள்ள 16 ஆயிரத்து 866 பேர் கல்லூரி வாயிலாக பட்டங்களை பெறுகின்றனர்.
இந்த விழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் பேசியதாவது:-
135 கோடி மக்கள் தொகை உடைய இந்தியாவுக்கு 6 லட்சம் டாக்டர்களும், 2 லட்சம் செவிலியர்களும் தேவைப்படுகிறது. ஆனால் 1,500 நோயாளிகளுக்கு ஒரு டாக்டர் என்ற எண்ணிக்கையில்தான் தற்போது நாட்டில் டாக்டர்கள் இருக்கின்றனர். 36,000 அரசு மருத்துவ இடங்கள் உட்பட நாடு முழுவதும் 71,000 மருத்துவ இடங்கள் உள்ளன.
மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். குறைந்த விலையில், தரமான உயர்தரமிக்க மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு தற்போது நடைமுறையில் உள்ள மிகப்பழைய பாடத்திட்டம், தரமற்ற கல்லூரிகள், வியாபாரமாகிப்போன மருத்துவக்கல்வி, அதிக கல்விக்கட்டணம் ஆகியவை முக்கிய தடைகளாக உள்ளன.
தற்போதுள்ள மருத்துவக்கல்வி பாடத்திட்டம் இந்தியாவுக்கானது அல்ல. 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளில் பின்பற்றப்பட்ட ஆங்கில மருத்துவமே இன்னும் இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் மாற்றம் தேவை.
ஆயுர்வேதம், சித்தா, யுனானி, இயற்கை மருத்துவம், ஓமியோபதி உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளை விரிவாக்கம் செய்ய வேண்டிய தேவை உருவாகி உள்ளது. புதிய கல்விக்கொள்கை 2020-ல் கூறப்பட்டுள்ள விஷயங்களை எம்.ஜி. ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் பின்பற்றிவருவது கவனிக் கத்தக்கது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகளை விரிவாக்கம் செய்து, மேம்படுத்த வேண்டியது கட்டாயம் ஆகிறது. ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனையையும், மருத்துவக்கல்லூரியாக மாற்றி மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே நாட்டில் சுகாதாரத்துறை வளம்பெறும். புதிய கல்விக்கொள்கையில் மருத்துவக்கல்வி பற்றி வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமல்படுத்தும் முன், தேசிய மருத்துவ கவுன்சிலுடன் கட்டா யம் ஆலோசிக்க வேண்டும்.
விண்வெளி ஆராய்ச்சியிலும், ககன்யான் விண்கலத்தை செலுத்துவதிலும் காட்டும் அக்கறையை, மருத்துவக்கல்வி, ஆராய்ச்சியை மேம்படுத்துவதிலும் காட்ட வேண்டும். விண்வெளிக்கு ஒருவர் செல்லும்போது, அவர் உடல்ரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. அவற்றிலிருந்து தற்காத்து கொள்ள யோகா பயிற்சி பெரிதும் உறுதுணையாக இருக்கும் இவ்வாறு அவர் பேசினார்.