திருவெறும்பூர் அருகே துப்பாக்கி தொழிற்சாலை பெண் ஊழியர் வீட்டில் 51 பவுன் நகை, ரூ.5½ லட்சம் திருட்டு
திருவெறும்பூர் அருகே துப்பாக்கி தொழிற்சாலை பெண் ஊழியர் வீட்டில் 51 பவுன் நகை, ரூ.5½ லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.
துவாக்குடி,
திருவெறும்பூர் அருகே பாலாஜிநகர் 7-வது தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவருடைய மனைவி கவிதா(வயது 45). இவர் மத்திய அரசு நிறுவனமான துப்பாக்கி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சுதர்சன் (21) சூர்யா (14)ஆகிய இரு மகன்கள் உள்ளனர். வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டார். நேற்று முன்தினம் காலையில் கவிதா வேலைக்கும், சுதர்சன் கல்லூரிக்கும் சென்றுவிட்டனர். இதனால், சூர்யா வீட்டை பூட்டிவிட்டு, தனது நண்பரின் வீட்டுக்கு சென்றுவிட்டான். பின்னர் மதியம் 1 மணிக்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. அதில் தாழ்ப்பாள் அறுக்கப்பட்டு கிடந்தது.
நகை, பணம் திருட்டு
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சூர்யா வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு நகை மற்றும் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுபற்றி தனது தாயாருக்கு தகவல் கொடுத்தான். உடனே அவர் வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்த போது வீட்டில் பீரோவில் இருந்த 51 பவுன் நகைகள், ரூ.5½ லட்சம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் தாழ்ப்பாளை அறுத்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அங்கு பதிவாகி இருந்த மர்ம ஆசாமிகளின் கைரேகைகள் மற்றும் அவர்கள் விட்டுச்சென்ற தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடிவருகிறார்கள்.