பொதுமக்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை; சுகாதாரத்துறை அறிக்கை

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பொதுமக்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என மராட்டிய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Update: 2020-03-04 23:59 GMT
மும்பை,

சீனாவில் பரவி பெருமளவு உயிர்பலி வாங்கிய கொரோனா வைரஸ் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் சுகாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் அனைவரது கவனமும் முகக்கவசம் (மாஸ்க்) மீது திரும்பியுள்ளது.

வைரஸ் தொற்று வராமல் இருக்க முகக்கவசம் அணிந்து கொள்ள அவசரம் காட்டி வருகிறார்கள். ஆனால் ஆரோக்கியமாக இருப்பவர்கள் முகக்கவசம் அணிய வேண்டாம் என மராட்டிய மாநில சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொது மக்கள் சுய பாதுகாப்புக்காக பருத்தி கைக்குட்டைகளை பயன்படுத்தலாம். அந்த கைக்குட்டைகளை சூடான நீரில் அரை மணி நேரம் போட்டு வைத்து அலசி விட்டு மீண்டும் பயன்படுத்தலாம்.

மருத்துவ கண்காணிப்பில் இல்லாத ஆரோக்கியமான ஒருவர் முகக்கவசம் அணிவதால் அவருக்கு சுவாச பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கடைகளில் விற்பனை செய்யப்படும் முகக்கவசம்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பயன்படுத்த மட்டுமே. இந்த நோயால் பாதிக்கப்பட்டவரை அணுகும் போது முகக்கவசம் பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்