மேட்டுப்பாளையம் அரசு ஐ.டி.ஐ.யில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் அரசு ஆண்கள் ஐ.டி.ஐ. உள்ளது. இங்கு நேற்று மதியம் கவர்னர் கிரண்பெடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2020-03-04 23:57 GMT
மூலக்குளம்,

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் அரசு ஆண்கள் ஐ.டி.ஐ. உள்ளது. இங்கு நேற்று மதியம் கவர்னர் கிரண்பெடி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், வகுப்பறைகள், பணிமனை உள்ளிட்டவைகளை பார்வையிட்டு மாணவர்களிடம் கலந்துரையாடினார். இந்த ஆய்வின்போது தொழிலாளர் துறை செயலர் வல்லவன் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

ஆய்வின்போது கவர்னர் கிரண்பெடி கூறுகையில், ‘அரசு ஐ.டி.ஐ.யில் படித்து வரும் மாணவர்களை பொதுப்பணித்துறை, மின்துறை, நகராட்சி ஆகிய துறைகளில் பயிற்சிக்கு அனுப்பலாம். நவீன தொழில்நுட்பங்கள் குறித்து சிறந்த வல்லுனர்களை கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்தலாம். மாணவர்களின் வேலை வாய்ப்புக்கு உதவும் வகையில் மென் திறனை வளர்க்க வேண்டும்’ என்றார்.

மேலும் செய்திகள்