சூளகிரி துரை ஏரியில் செத்து மிதந்த மீன்கள் பொதுமக்கள் அதிர்ச்சி
சூளகிரி துரை ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் இருந்து பேரிகை செல்லும் சாலையோரம் துரை ஏரி உள்ளது. கெலவரப்பள்ளி அணையில் இருந்து கடந்த சில நாட்களாக சூளகிரி துரை ஏரிக்கு தண்ணீர் வருகிறது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், நேற்று துரை ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன.
பொதுமக்கள் அதிர்ச்சி
ஏற்கனவே கடந்த ஆண்டு மருதாண்டப்பள்ளி ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன. அதற்கு என்ன காரணம் என இன்னும் தெரியாத நிலையில், சூளகிரி துரை ஏரியில் நேற்று ஏராளமான மீன்கள் செத்து தண்ணீரில் மிதந்தன.
இதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மீன்கள் செத்து மிதந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.