பணி நிரந்தரம், சம்பள உயர்வை வலியுறுத்தி என்.ஆர்.எச்.எம். ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
பணி நிரந்தரம், சம்பள உயர்வை வலியுறுத்தி காரைக்காலில் என்.ஆர்.எச்.எம். ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
காரைக்கால்,
புதுச்சேரி அரசு நலவழித்துறையின் கீழ் இயங்கும் தேசிய சுகாதார இயக்கக திட்டத்தின் கீழ் 600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பல்வேறு நிலைகளில் கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்தபட்ச தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு சம வேலைக்கு சம சம்பளம் என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படவில்லை. இதற்கிடையே என்.ஆர்.எச்.எம். (தேசிய சுகாதார இயக்கக திட்டம்) ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் என்.ஆர்.எச்.எம். திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தர பணி நியமனத்தின் போது 33 சதவீத ஒதுக்கீடு வழங்குவதாக முடிவெடுத்தது. ஆனால் அதற்கான எந்தவித முயற்சியும் இதுவரை அரசு எடுக்கவில்லை. அதுபோல் குறைந்த அளவு தொகுப்பூதியம் பெற்று வரும் என்.ஆர்.எச்.எம். ஊழியர்களுக்கு மத்திய அரசின், சுகாதார இயக்ககம் ஆண்டிற்கு 5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தியும், கடந்த 2019-2020-ம் நிதியாண்டுக்கான ஊதிய உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை.
காத்திருப்பு போராட்டம்
எனவே புதுச்சேரி அரசு அமைச்சரவையில் எடுத்த முடிவின்படி 33 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் சுகாதாரத்துறையில் உள்ள நிரந்தர பதவிகளில் என்.ஆர்.எச்.எம். தொகுப்பூதிய ஊழியர்களை 33 சதவீதம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கடந்த 2019-2020-ம் நிதி ஆண்டுக்கான 5 சதவீத சம்பள உயர்வை நிலுவையுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி என்.ஆர்.எச்.எம். ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் இரவு தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். நேற்று 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்து நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் ஜெய்சிங், பொதுச் செயலாளர் ஷேக்அலாவுதீன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் ஏராளமான பெண் ஊழியர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.