தூத்துக்குடியில் திருமண மண்டபத்துக்கு சீல் வைப்பு சொத்து வரி செலுத்தாததால் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

தூத்துக்குடியில் சொத்து வரி செலுத்தாததால் திருமண மண்டபத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2020-03-03 22:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் சொத்து வரி செலுத்தாததால் திருமண மண்டபத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சொத்து வரி 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், குடியிருப்புகளில் சொத்து வரி உள்ளிட்ட வரிகளை வசூலிப்பதற்கு மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் உத்தரவின்படி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை தோறும் நீண்ட நாட்களாக வரி செலுத்தாத நிறுவனங்கள், குடியிருப்புகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, சீல் வைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சீல் வைப்பு 

தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள ராஜேசுவரி திருமண மண்டபத்துக்கு ரூ.4 லட்சத்து 67 ஆயிரத்து 761 சொத்து வரி பாக்கி உள்ளது. தற்போது இந்த தொகையை செலுத்தாததால், உதவி வருவாய் அலுவலர்(பொறுப்பு) பாலசுந்தரம் தலைமையிலான அதிகாரிகள் நேற்று அந்த திருமண மண்டபத்தை பூட்டி சீல் வைத்தனர். இதே போன்று வரி செலுத்தாத நிறுவனங்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்