எச்.எஸ்.துரைசாமி விவகாரம் குறித்து பேச அனுமதி கோரி கர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் தர்ணா நாள் முழுவதும் சபை முடங்கியது
சுதந்திர போராட்ட தியாகி எச்.எஸ்.துரைசாமி பற்றிய பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் சர்ச்சை கருத்து குறித்து பேச அனுமதி வழங்க கோரி கர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் தர்ணாவில் ஈடுபட்டன. இதனால் நாள் முழுவதும் சபை முடங்கியது.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று தொடங்கியது.
சரியாக காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், சபாநாயகர் காகேரி, முன்னாள் மந்திரி சென்னிகப்பா, சுதந்திர போராட்ட தியாகி சுதாகர் சதுர்வேதி, வரலாற்று ஆய்வாளர் ஷ.ஷெட்டர் ஆகிய மூன்று பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானத்தை தாக்கல் செய்தார். அந்த தீர்மானம் மீது முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்டோர் பேசினர்.
அதைத்தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் சபாநாயகர் காகேரி, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளிக்குமாறு முதல்-மந்திரி எடியூரப்பாவை கேட்டுக் கொண்டார். அதன்படி எடியூரப்பா எழுந்து நின்று, பதிலளிக்க ஆரம்பித்தார்.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா இருக்கையில் இருந்து எழுந்து, சபாநாயகரை நோக்கி, ஒரு மிக முக்கியமான பிரச்சினை குறித்து பேச அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அதற்கு சட்டமன்ற விவகாரத்துறை மந்திரி மாதுசாமி, “சபை நிகழ்ச்சி நிரலில் உள்ளபடி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நடைபெற்ற விவாதத்தில் முதல்-மந்திரி பதிலளிக்க வேண்டும். நிகழ்ச்சி நிரலில் இல்லாத விஷயம் குறித்து பேச முடியாது. அவ்வாறு பேச அனுமதித்தால், சபையின் விதிகள் எதற்கு இருக்க வேண்டும்?” என்றார்.
மீண்டும் பேசிய சித்தராமையா, “பா.ஜனதாவை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ., 102 வயது நிரம்பிய சுதந்திர போராட்ட தியாகி எச்.எஸ்.துரைசாமி குறித்து மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். தான் கூறிய கருத்தில் உறுதியாக இருப்பதாக 3 முறை கூறியுள்ளார். இதன் மூலம் அவர் ஒட்டுமொத்த சுதந்திர போராட்ட தியாகிகளை அவமதித்துவிட்டார். அவர் அரசியல் சாசனத்திற்கு எதிராக பேசியுள்ளார். இது மிக முக்கியமான விவகாரம். இதுகுறித்து பேச அனுமதிக்க வேண்டும். நிகழ்ச்சி நிரலில் இந்த விஷயம் இல்லாவிட்டாலும், முக்கியமான பிரச்சினை குறித்து பேச அனுமதி வழங்க சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளது” என்றார்.
அப்போது மீண்டும் பேசிய மாதுசாமி, “எதிர்க்கட்சி முன்கூட்டியே கடிதம் கொடுத்து இந்த விவகாரம் குறித்து பேச அனுமதிக்குமாறு கேட்டிருக்க வேண்டும். அதை செய்யவில்லை. திடீரென ஒரு பிரச்சினையை கிளப்பி பேச அனுமதி வழங்குமாறு கேட்பது சரியல்ல. இந்த சபையை நடத்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி தான் சபை நிகழ்வுகள் நடைபெற வேண்டும்” என்றார். இந்த விஷயத்தில் சித்தராமையாவுக்கும், மாதுசாமிக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் உண்டானது.
அப்போது சபாநாயகர் காேகரி, சித்தராமையாவை நோக்கி மீண்டும் பேசும்போது, “முதல்-மந்திரி முதலில் பதில் அளிக்கட்டும்,. அதன் பிறகு உங்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கிறேன். சபையை சுமுகமாக நடத்த இருதரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று கூறி சித்தராமையாவின் வேண்டுகோளை நிராகரித்துவிட்டார். அதைத்தொடர்ந்து முதல்-மந்திரி எடியூரப்பா, பேச ஆரம்பித்தார். இதற்கு சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அதைதொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் இருக்கையை விட்டு எழுந்து வந்து சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதற்கு ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர். பதிலுக்கு பா.ஜனதா உறுப்பினர்கள் வீர சாவர்க்கர் வாழ்க என்று முழக்கத்தை எழுப்பினர்.
இந்த கூச்சல்-குழப்பத்திற்கு இடையே எடியூரப்பா தொடர்ந்து பேசினார். 20 நிமிடங்கள் நீடித்த கடும் அமளிக்கு மத்தியில் முதல்-மந்திரி தனது பதில் உரையை நிறைவு செய்தார். அதைத்தொடர்ந்து சபையை அரை மணி நேரம் சபாநாயகர் ஒத்திவைத்தார்.
அதன் பிறகு சபாநாயகர் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களை தனது அறைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். சபையை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
உணவு இடைவேளைக்கு பிறகு சபை மீண்டும் மாலை 4 மணியளவில் கூடியது. அப்போதும், எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டன. இதற்கிடையே சில மசோதாக்களை கர்நாடக அரசு தாக்கல் செய்தது. அதன் பிறகு சபை நாளைக்கு (அதாவது இன்று) காலை 11 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் நேற்று நாள் முழுவதும் சபை முடங்கியது. இந்த விவகாரம் கர்நாடக மேல்-சபையிலும் எதிரொலித்தது.
இதற்கிடையே சட்டசபை கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அக்கட்சி தலைவர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். நேற்று காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், இந்த உத்தரவை சித்தராமையா பிறப்பித்துள்ளார்.