வேளாண் அறிவியல் நிலையத்தில் காய்த்து தொங்கும் பலா காய்கள்

புதுச்சேரி வேளாண் அறிவியல் நிலையத்தில் பலாக்காய்கள் காய்த்து தொங்கும் நிலையில் அதனை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-03-02 00:09 GMT
புதுச்சேரி,

புதுவை குரும்பாபேட்டில் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் உள்ளது. இங்கு வேளாண் படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் செயல்விளக்கத்துக்காக பண்ணை உள்ளது.

இங்கு மா, பலா என பல்வேறு வகையான பழ மரங்கள் உள்ளன. பலா சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில் இங்குள்ள பலா மரங்களில் கொத்து கொத்தாக காய்கள் காய்த்து தொங்குகின்றன.

விஷ பூச்சிகள்

பெரும்பாலான மரங்களில் 10-க்கும் மேற்பட்ட காய்கள் பிடித்து பார்ப்பதற்கே அழகாக காட்சியளிக்கின்றன. ஆனால் போதிய பராமரிப்பின்றி அந்த பகுதி உள்ளது.

மரங்களில் இருந்து உதிர்ந்த இலைகள் மாதக் கணக்கில் அகற்றப்படாமல் அங்கு குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக விஷ பூச்சிகள் நடமாட்டம் அங்கு அதிகமாக இருப்பதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

சுத்தமாக வைத்திருக்க...

எனவே அங்கு குவிந்துள்ள இலை சருகுகளை அகற்றி அப்பகுதியை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்