நாஞ்சிக்கோட்டையில், இன்று ஜல்லிக்கட்டு 650 காளைகள்-400 வீரர்கள் பதிவு
நாஞ்சிக்கோட்டையில் இன்று நடக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 650 காளைகள் பதிவு செய்யப்பட்டதுடன், 400 வீரர்களும் பதிவு செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று(சனிக்கிழமை) காலை 8 மணிக்கு நடக்கிறது. இதற்காக வீரர்கள், காளைகளுக்கு எந்தவித காயமும் ஏற்படாமல் இருக்க வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை 1 அடி உயரத்துக்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டுள்ளன. அதேபோல் காளைகள், பார்வையாளர் பகுதிக்குள் சென்றுவிடாதபடி தடுக்க இரும்பு கம்பிகள், சவுக்கு கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
காளைகள் வரிசையாக செல்வதற்கு வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டில் பங்கேற்க தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 650 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாடுபிடி வீரர்கள் 400 பேர் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை தஞ்சை மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) மணிமேகலை, வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி ஆகியோர் நேற்றுகாலை ஆய்வு செய்தனர். அவர்கள், வாடிவாசலுக்கு காளைகள் வரிசையில் கொண்டு வரப்படும் இடம், பார்வையாளர் நிற்கும் இடம் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.
அப்போது வீரர்கள் நிற்கக்கூடிய களத்தின் இருபுறமும் இரும்பு வேலி அமைக்கப்பட்டு இருந்தது. இதில் வீரர்களால் எப்படி ஏறி நிற்க முடியும். இரும்பு வேலியை மாற்றிவிட்டு இரும்பு கம்பிகளை கொண்டு வந்து கட்டுங்கள். இல்லையென்றால் அதிகம்பேருக்கு காயம் ஏற்படும். பேட்டி நடத்த அனுமதி அளிக்கமாட்டோம் என அதிகாரிகள் கூறினர்.
மேலும் அவர்கள், வீரர்கள் களத்திற்குள் அனுப்பும் பாதையை மாற்ற வேண்டும். மருத்துவக்குழுவினர் அமருவதற்கு மேடையின் இடதுபுறத்தில் பந்தல் அமைக்க வேண்டும். ஆம்புலன்ஸ்கள் வந்து செல்ல பாதை வசதி ஏற்படுத்த வேண்டும். இவைகள் எல்லாம் செய்யப்பட்டு இருக்கிறதா? என மாலையில் வந்து ஆய்வு செய்த பிறகே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்தனர்.
அதையடுத்து அதிகாரிகள் சொன்ன மாற்றங்களை விழாக்குழுவினர் செய்தனர். பின்னர் மாலையில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தபோது ஏற்பாடுகள் முழுமையாக இருந்ததை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடந்த அனுமதி அளித்தனர்.
ஆய்வின் போது தாசில்தார் வெங்கடேஸ்வரன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்ச்செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் சத்தியராஜ், கால்நடை மருத்துவர் முகமதுசெரீப் மற்றும் ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் உடன் இருந்தனர்.