சாலையில் வீணாக செல்லும் குடிநீர்

வாலாஜா அருகே சாலையில் குடிநீர் வீணாக செல்கிறது.

Update: 2020-02-28 22:00 GMT
வாலாஜா, 

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த அனந்தலை கிராமத்தில், படியம்பாக்கம், வள்ளுவம்பாக்கம், பொன்னப்பந்தாங்கல் ஆகிய கிராம பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. ஏற்கனவே இந்த சாலை மோசமான நிலையில் இருந்ததால் சில மாதங்களுக்கு முன்பு புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் அனந்தலை கிராமத்திற்கான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வீணாகி தேங்கி கிடக்கிறது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக குடிநீர் வீணாகி வருவதால் அந்த பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து சாலை பள்ளத்தையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்