நெல்லை மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்
நெல்லை மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
அம்மா திட்ட முகாம்
தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவால் அம்மா திட்ட முகாம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு பயணம் செய்து நீண்ட நேரம் காத்திருந்து மனுக்களை அளிப்பதால் ஏற்படும் நேரம், செலவு மற்றும் பல்வேறு இன்னல்களை போக்கும் வகையில் மக்கள் வசிக்கும் இடத்துக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் சென்று குறைகளை கேட்கும் வகையில் அம்மா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, நெல்லை மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
மனுக்கள்
நெல்லை தாலுகா திருப்பணிகரிசல்குளம், திருப்பணி நெல்லையாபுரம் ஆகிய கிராமங்கள், பாளையங்கோட்டை தாலுகா கருப்பந்துறை, மானூர் தாலுகா நரிக்குடி, சேரன்மாதேவி தாலுகா பாப்பாக்குடி பகுதி–1, நாங்குநேரி தாலுகா ஆழ்வாநேரி, அம்பை தாலுகா விக்கிரமசிங்கபுரம் பகுதி–1, ராதாபுரம் தாலுகா திருவம்பலாபுரம், திசையன்விளை தாலுகா கண்ணநல்லூர் ஆகிய ஊர்களில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறுகிறது.
இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டாக்கள், முதியோர் உதவித்தொகை, நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மறுபரிசீலனை விண்ணப்பம் உள்பட சமூக பாதுகாப்பு திட்டங்கள், உழவர் பாதுகாப்பு அட்டைகள், நிலத்தாவாக்கள், சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மனுக்களை கொடுத்து பயன் அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.