தஞ்சைக்கு முதல்-அமைச்சர் இன்று வருகை: பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார்
தஞ்சைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) வருவதையொட்டி பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர்,
அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. இல்ல திருமண விழா தஞ்சையில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்.
விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 6 மணிக்கு சேலத்தில் இருந்து காரில் புறப்பட்டு 8.30 மணிக்கு திருச்சி சுற்றுலா ஆய்வு மாளிகைக்கு வருகிறார். அங்கு காலை உணவு சாப்பிட்டுவிட்டு மீண்டும் காலை 9 மணிக்கு காரில் புறப்பட்டு 9.50 மணிக்கு தஞ்சைக்கு வருகிறார். பின்னர் அவர், திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி விட்டு பின்னர் அவர் காரில் திருச்சி சுற்றுலா ஆய்வு மாளிகைக்கு செல்கிறார். அங்கு மதிய உணவு சாப்பிட்டு விட்டு சிறிதுநேரம் ஓய்வு எடுக்கிறார். அதைத்தொடர்ந்து மாலை 4.05 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு சென்று 4.45 மணிக்கு விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
பாதுகாப்பு பணி
முதல்-அமைச்சர் வருகையையொட்டி சாலையோரங்களில் கட்சி கொடி கட்டப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக தஞ்சை மட்டுமின்றி நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப் பட்டுள்ளனர். போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் மேற்பார்வையில் 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 12 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 18 இன்ஸ்பெக்டர்கள், 500 போலீசார், 300 ஆயுதப்படை போலீசார் மற்றும் 6 கண்காணிப்பு குழுவினர் என மொத்தம் 1,000 போலீசார் நேற்று மாலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தஞ்சை நகரில் உள்ள தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். மேலும் தஞ்சை நகருக்குள் வரக்கூடிய வாகனங்களையும் போலீசார் திடீரென சோதனை நடத்தினர்.