நெல்லை மாவட்டத்திற்கு 3–ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை மாவட்டத்திற்கு அய்யா வைகுண்டர் அவதார நாளான வருகிற 3–ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்திற்கு அய்யா வைகுண்டர் அவதார நாளான வருகிற 3–ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
உள்ளூர் விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டம், சுவாமித் தோப்பு அய்யா பகவான் வைகுண்டசாமியின் அவதார தின விழா வருகிற 3–ந்தேதி (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு வருகிற 3–ந்தேதி(செவ்வாய்க்கிழமை) நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லு£ரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
3–ந்தேதி அரசு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளதால் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது. அரசு பொதுத்தேர்வுகள் அனைத்தும் எவ்விதமாறுதலுமின்றி நடைபெறும்.
இந்த 3–ந்தேதி உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகிற 21–ந்தேதி (சனிக்கிழமை) அன்று வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.