அரசு மருத்துவமனையில் பிறந்த 12 பெண் குழந்தைகளுக்கு பரிசுகள்; அமைச்சர் வழங்கினார்

மாநில பெண் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த 12 பெண் குழந்தைகளுக்கு பரிசுகள் அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்

Update: 2020-02-24 22:00 GMT
திருப்பத்தூர், 

தமிழக அரசு ஜெயலலிதா பிறந்தநாளை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்தது. அதனையொட்டி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவ அலுவலர்செல்லக்குமார் தலைமை தாங்கினார். டாக்டர் குமரவேல் வரவேற்றார். டாக்டர் திலீபன் முன்னிலை வகித்தார்.

மருத்துவமனையில் நேற்று பிறந்த 12 பெண் குழந்தைகளுக்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பரிசுகள் மற்றும் பணம் வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் நகர செயலாளர் டி.டி.குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், மாவட்ட பாசறை செயலாளர் டி.டி.சி.சங்கர், தொகுதி செயலாளர் கே.எம்.சுப்ரமணியம், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் டாக்டர் லீலா சுப்ரமணியம், ஒன்றிய செயலாளர் சி.செல்வம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் டாக்டர் என்.திருப்பதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் டாக்டர் பிரபாகரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்