ரூ.2½ கோடி கையாடல் செய்த வங்கி மேலாளருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு

வங்கியில் ரூ.2½ கோடி கையாடல் செய்த வங்கி மேலாளருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2020-02-21 23:36 GMT
புனே, 

புனேயில் கடந்த 2009 முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் மகாராஷ்டிரா வங்கியின் 5 கிளை களில் மேலாளராக பணியாற்றிவர் சாலிவாகன் சோரேகாவ்கர். இவர் ராகேஷ் ஜாதவ் என்பவர் துணையுடன் வங்கியில் ரூ.2 கோடியே 50 லட்சம் வரை கையா டல் செய்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இருவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்கள் மீது புனேயில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

10 ஆண்டு கடுங்காவல்

இந்த வழக்கு விசாரணை நிறைவில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூ பிக்கப்பட்டன. இதை யடுத்து வங்கி மேலாளர் சாலிவாகன் சோரேகாவ்கருக்கு 10 ஆண்டு கடுங் காவல் தண்டனையும், ரூ.24 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு கூறினார்.

கையாடலுக்கு அவருக்கு உடந்தையாக இருந்த ராகேஷ் ஜாதவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப் பட்டது.

மேலும் செய்திகள்