விபத்துகளை தடுக்க சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
விபத்துகளை தடுக்க சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.
பாகூர்,
கிருமாம்பாக்கத்தில் உள்ள தெற்கு சரக போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் நிலுவையில் உள்ள வழக்குகளின் கோப்புகளை பார்வையிட்டு அதன் விவரத்தை கேட்டு அறிந்தார். பெண் காவலர்களுக்கு போலீஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டார்.
புதுச்சேரி - கடலூர் சாலையில் விபத்துகளை குறைப் பதற்கு ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும், விபத்து ஏற்படுத்தும் வாகனங்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும், பொதுமக்களிடம் சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் போலீசாருக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது போக்கு வரத்து போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணி, இன்ஸ்பெக்டர் தனசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.