குற்றாலம், நெல்லையில் தி.மு.க. பிரமுகர் விடுதி, ஓட்டலில் வருமான வரி சோதனை
தி.மு.க. பிரமுகர் விடுதி, ஓட்டலில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
தென்காசி,
தி.மு.க. பிரமுகர் விடுதி, ஓட்டலில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இலஞ்சி சொகுசு விடுதி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் அய்யாத்துரை பாண்டியன். இவர் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணைத்தலைவராக செயல்பட்டு வருகிறார். இவருக்கு சொந்தமான சொகுசு விடுதி குற்றாலம் அருகே உள்ள இலஞ்சி குமாரர் கோவில் பகுதியில் உள்ளது.
இந்த விடுதிக்கு நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென்று வந்தனர். அவர்கள் பிற்பகல் வரை தீவிர சோதனை நீடித்தது. முக்கிய ஆவணங்கள், வருமான விவரங்களை கேட்டனர். ஆனால் இந்த சோதனையில் எத்தகைய ஆவணங்கள், பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்ற விவரத்தை அதிகாரிகள் உடனடியாக தெரிவிக்கவில்லை.
நெல்லையில் ஓட்டல்
இதே போல் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அய்யாத்துரை பாண்டியனுக்கு சொந்தமான ஓட்டலிலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.